Advertiment

 பாடலாசிரியர் சினேகன் திருமணம்  கமல் நேரில் வாழ்த்து 

by Editor

சினிமா
 பாடலாசிரியர் சினேகன் திருமணம்  கமல் நேரில் வாழ்த்து 

தமிழ் சினிமா பாடலாசிரியர் சினேகன்.  700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன்பிறகு நடிகர் கமல் ஹாசனால் ஈர்க்கப்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். தற்போது அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார்.


இந்நிலையில், நடிகை கன்னிகா ரவியை  சினேகன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். சென்னையில் எளிமையான முறையில் நடந்த இவரின் திருமணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முன்நின்று நடத்தி வைத்துள்ளார். திரை பிரபலங்கள் பலர் கலந்து  கொண்டனர்.

Share via