Advertiment

கல்லூரி மாணவர்களுக்கு  ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்  அமைச்சர் பொன்முடி 

by Editor

கல்வி
 கல்லூரி மாணவர்களுக்கு  ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்  அமைச்சர் பொன்முடி 



சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9 ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வுகளில் மதிப்பெண் கணக்கீடு செய்வது போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கொண்டுவருவது குறித்து மானவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்பொறியியல் படிப்புகளான பி.இ, பி டெக் ஆகியவற்றிற்கு 41,363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,748 விண்ணப்பங்கள் மானவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன இது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்படும். மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கல்லூரி திறப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் என விளக்கமளித்த அமைச்சர், 'அனைத்து தனியார் கல்லூரிகளிலும் கொரோனா காலம் முடியும் வரை 75 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகளில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது. அவை மாற்றம் செய்யப்பட்டு பிற கல்லூரிகளில் உள்ளது போல் அரியர் தேர்வுகள் எழுத வாய்பளிக்கப்படும்' என்று கூறினார்.

Share via

More Stories