
இன்று விஜயதசமி, இந்தியாவில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான ஒரு விழா .10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவை தசரா விழா என்றும் நவராத்திரி விழா என்றும் அழைக்கின்றனர்.. வட இந்தியாவில் பத்தாவது நாளான தசராவில் ராவண உருவத்தை எரித்து வட இந்திய மக்கள் கொண்டாடுகின்ற விழாவாக, அதாவது ராம லீலா விழாவாக கொண்டாடப்படுகிறது
.இந்த விஜய தசமி பண்டிகை. ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்தி சென்ற பொழுது ராமன் சீதையை விடுமாறு வேண்ட.... ஆனால் ,ராவணன் மறுத்து விட... அது ராமாயண போருக்கு வழிவகுத்தது. ராமன்- ராவணனை விஜய தசமி அன்று வீழ்த்திய நாளை வட இந்தியர்கள் ராம் லீலா என்ற விழாவாக எடுத்து பெரும் திரளான மக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் ராவணன் மற்றும் அவனது சுற்றத்தினர் உருவ பொம்மைகளை, ராமன் வேடம் தரித்தவர் கொண்டு அம்பால் எய்திய ஏறியூட்டப்படுகிற விழாவாக கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவை பொறுத்த வரை மகிஷாசுரனை அளிக்க துர்க்கை தேவையானவள் அவதரித்து ஒன்பது நாட்கள் போர் செய்ய...... போர்முடிவுக்கு வரக்கூடிய நாள் விஜய தசமி நாளாக கொண்டாடப்படுகிறது.
.தமிழகத்தை பொறுத்தமட்டில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு- நடனம்- இசை கருவிகளை கற்றல், புதிதாக ஒரு தொழிலை மேற்கொள்ள, இந்நாள் உகந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
சரஸ்வதி தேவையானவள்., இந்த நாளில் புதிதாக கற்க்கிறவர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் பூரணமான அருளாசியை வழங்கி, அவர்களுடைய வாழ்வை செழிக்க வைப்பாள் என்று சொல்லப்படுகிறது..