Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

​​​​​​​ நவரசா டிரைலர் வெளியீடு

by Editor

சினிமா
​​​​​​​ நவரசா டிரைலர் வெளியீடு

 

9 இயக்குநர்கள் 9 வித உணர்வுகளை பிரதிபலிக்கும் 9 குறும்படங்களை உள்ளடக்கிய நவரசா எனும் ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது.

CORONA காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 4,5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. பழையபடி சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் -களில் இருக்கும் அனைத்து படங்களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், பாவக்கதைகள் என்னும் படத்தை தொடர்ந்து தற்போது நவரசா என்னும் படத்தை வெளியியாக இருக்கிறது. நவரசா ஆந்தாலஜியில் 9 கதைகளை பிரியதர்ஷன் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், வசந்த் சாய் , பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர்களாக ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்கள். இதில் கெளதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இதன் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியான நிலையில் தற்போது நவரசா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது மெகா கூட்டணி என்பதால் ரசிகர்களும் இந்த படத்திற்கான வெறி கொண்ட வேங்கையாக காத்து கிடக்கிறார்கள்.

 

Share via