
ஆறுபடை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான 23.10.2023 விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12.00 மணிக்கும், அதனைத்தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். மேலும் மாலை 3.00 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு ஆனதும் சன்னதி திருக்காப்பிடப்படும்.
நிகழ்வினைத்தொடர்ந்து 23.10.2023 அன்று காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது.