Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மாபெரும் வினாடி வினா போட்டி

by Admin

கல்வி
நேஷனல் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ -  மாணவிகளுக்கு மாபெரும்  வினாடி வினா போட்டி

கோவில்பட்டி,நேஷனல் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான மாபெரும் வினாடி வினா போட்டி  இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து ஒன்பதாவது  ஆண்டாக  நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ மாணவியர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.

கணிதத் துறை உதவி பேராசிரியை முனைவர் எஸ்.கீதா வரவேற்றார்.இதில் தலைமை உரையாற்றிய  கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் கிராமப்புற மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்காக கல்லூரி முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை விளக்கி கல்வியின் அடிப்படை நன்மைகள் பற்றி எடுத்துரைத்ததோடு போட்டிதேர்வுகளின் போது கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் எவ்வாறு முழு திறன்களையும் வெளிப்படுத்துவது என்பதற்கு இது போன்ற வினாடி வினா போட்டிகள் உதவும் என விளக்கி பேசினார்.இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார். காலை 11.30 மணியளவில்  நடத்தப்பட்ட தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட  முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில்  நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன் முனைவர்.எம்.ஏ.நீலகண்டன் மற்றும்  சிறப்பு விருந்தினர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பசின்   மாணவர்கள் எம்.முத்து சிவகாதிர்  மற்றும் ஜி.அஸ்வின் சிவா முதல்பரிசு ரூபாய் 25,000தையும், திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா  மற்றும் வீ.பி.ஹரினி இரண்டாம் பரிசு ரூபாய் 15,000தையும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பி பொன்செல்வ ஜெயந்த் மற்றும் எப் ஜாய்சன் ராஜா ஆகியோர் மூன்றாம் பரிசு ரூபாய் 10,000-தையும் தட்டி சென்றனர். 

மேலும் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கே.கார்த்திகேயன்,என்.ஹரிசுப்ரமணியன், மதுரை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் எம்.மாத்திஸ் பிரபு,ஆர்.ஹரிசரன், பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் இங்கிலிஷ் பள்ளியின் ஏ.ஸ்ரீநிதி, ஜி.எஸ்.அமோஹா ,திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர கோல்டன் ஜூபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எஸ்.மதுவர்ஷினி, ஒய்.ஸ்ரீவத்சன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவிலயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எம்.ஆர்.கார்த்திக் பாண்டியன், எல்.ஹரிநாத், சாத்தூர் கே.சி.ஏ.டி.சிதம்பர நாடார் மேல்நிலைப்பள்ளியின் கே.மோனிகா, எஸ். தர்ஷினி, திருநெல்வேலி ஐ.ஐ.பி.இ.லக்ஷ்மிராமன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வி.இலக்கிய ப்ரியா, கே.இன்டெஸ் ராம், தூத்துக்குடி ஸ்பீக் நகர் மேல்நிலைப் பள்ளியின் ஜி.ஜெய்சுகன், எம்.செல்வப்பிரியா. மதுரை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியின்(சி.பி.எஸ்.இ) கே.சஞ்சய் ஸ்ரீநிவாஸ்,டி.சாய் சந்தோஷ், குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆர்.கணபதி சுந்தர், எம்.திலீபன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர்  முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர்.எஸ்.சித்திரைக்குமார்,  எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், முனைவர் எம்.அரவிந்த், முனைவர் எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைப்புடன் செய்திருந்தனர்.

 

Share via

More Stories