
கல்லூரி உதவி பேராசிரியர் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான நெட் தேர்வை எழுதுவதற்கான தேதியை அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
அதன்படி 30 செப்டம்பரில் இருந்து அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்ப பதிவு வங்கி வழியாக கிரெடிட் கார்டு- டெபிட் கார்டு- யுபிஐ வழியாக பணம் கட்டுவதற்கு 29 அக்டோபர் மாதம் இரவு 11.50 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. .விண்ணப்ப பதிவில் மாற்றங்கள் செய்வதற்கு 30 ,31 அக்டோபர் 2023 ,11.50 வரை நேரம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு குறித்த தேர்வு எழுதும் இடங்கள் குறித்த அறிவிப்பு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளிவரும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் தேசிய முகம் என்னுடைய இணையதள பக்கத்தில் நுழைவு சீட்டுகளை பெறலாம் என்றும் தேர்வு தேதியாக ஆறு டிசம்பர் 2023, 22 டிசம்பர் 2023 என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
விண்ணப்ப பதிவிற்கான கட்டணம் பொது பிரிவிற்கு 1,350 ரூபாய் பிற்பட்ட இதர பிரிவினருக்கு 600 ரூபாய் என்றும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 325 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.