Advertiment

பொறியியல் கல்லூரிகளில்  ஆன்லைன்  விண்ணப்பம் பதிவு தொடக்கம்

by Editor

கல்வி
பொறியியல் கல்லூரிகளில்  ஆன்லைன்  விண்ணப்பம் பதிவு தொடக்கம்


அண்ணா பல்கலைக்கழகம் உட்பட  450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில்  1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கு  விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 


தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் எனவும் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும், அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும்  என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு தொடங்கியது.  143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு  ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories