Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர அழைப்பு

by Editor

கல்வி
 தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர அழைப்பு

 

தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மையில் எம்ஏ மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டயப்படிப்புகள் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


இதற்கு விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,’தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதியின்படி, மேற்கண்ட பிரிவுகளில் கல்வி கற்பது தொழிலாளர் நல அலுவலர் பதவிக்குப் பிரத்யேக கல்வி தகுதியாகும். இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பிஏ, எம்.ஏ தொழிலாளர் மேலாண்மை, பிஜிடிஎல்ஏ ஆகியப் படிப்புகள் முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.விருப்பமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம், தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பவேண்டும்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 100. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆகஸ்ட்24ஆம் தேதிக்குள் தொழிலாளர் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.இதற்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு: விவரங்களுக்கு: www.tilschennai@tn.gov.in/ 044 - 29567885 / 29567886

Share via

More Stories