Advertiment

நாளை முதல்   கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை

by Editor

கல்வி
நாளை முதல்   கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை



நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளை முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற www.tneaonline.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்ததையடுத்து நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் B.E., B.Tech படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share via

More Stories