
இன்று இலங்கை கொழும்பில் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பை கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்த இந்திய அணி அபாரமான தம் பேட்டிங் திறத்தால் பாகிஸ்தான் அணியை திக்கு முக்காட வைத்தது.விராட்கோலி. கே..எ ல். ராகுலும் செஞ்சுரி அடித்து இந்திய அணியை வலுவான ஒர் அணி என்பதை நிரூபணம்செய்தனர். 50 ஓவருக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை எடுத்து கம்பீரமாக நின்றது. அடுத்த ஆட வந்த பாகிஸ்தான் அணி 32 ஓவரின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது.. இந்திய அணி பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது.