Advertiment

10,12–ம் வகுப்பு சி.ஐ.எஸ்.சி.இ . தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவர்கள் தோல்வி

by Editor

கல்வி
10,12–ம் வகுப்பு சி.ஐ.எஸ்.சி.இ . தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவர்கள் தோல்வி



இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) 10 (ஐ.சி.எஸ்.இ.), 12 (ஐ.எஸ்.சி.)-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கொரோனா காரணமாக ரத்து செய்தது. அவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையை அறிவித்து, அதன்படி கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, 10ம் வகுப்பு தேர்வை 2 லட்சத்து 19 ஆயிரத்து 499 பேர் எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 454 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் 45 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோல், 12ம் வகுப்பு தேர்வை எழுத இருந்த 94 ஆயிரத்து 11 பேரில், 93 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்று அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வில் 230 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் 2 தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 275 மாணவ மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
சி.ஐ.எஸ்.சி.இ. இந்தியாவில் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ள தெற்கு மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பு தேர்வில் 99.91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share via

More Stories