Advertiment

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

by Admin

கல்வி
கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி மாணவ மாணவிகள் தன் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.விஸ்வகர்ம மகாஜன சங்க  துணை தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தன் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சந்திராயன் 4,எரிமலை,காற்றாலை, பசுமை வீடு, 3டி,சோலார், உள்ளிட்ட கண்காசிகள் இடம்பெற்றிருந்தனர். நிகழ்ச்சியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, பெற்றோர்கள் ஆசிரியர் கழகத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் அந்தோணி ராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து, ஆறுமுகம், சிங்காரவேல், முனியசாமி, விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் செயலாளர் மாரிமுத்து, உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

Share via

More Stories