Advertiment

நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம்

by Admin

சினிமா
 நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவர் மகள் சுஹானா கான், மனைவி கவுரி கான் மற்றும் நடிகை நயன்தாராவுடன் ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஷாருக்கை வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் கருவறையில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், பண்டிதர்கள் வேதம் ஓதி, அவருக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கினர். ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகிபாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Share via