
ஆர்யா - சாயிஷா ஜோடி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சாயிஷா காப்பான், டெடி ஆகிய திரைப்படத்தில் நடித்தார்.
ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கூடுதல் மகிழ்ச்சியாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதுநடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.