Advertiment

நடிகை ப்ரியாமணி திருமணம் செல்லாதா?

by Editor

சினிமா
நடிகை ப்ரியாமணி திருமணம் செல்லாதா?

 

நடிகை பிரியாமணி கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பதும் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென முஸ்தபா ராஜூவின் மனைவி ஆயிஷா தனது கணவரை தான் இதுவரை விவாகரத்து செய்யவில்லை என்றும் எனவே பிரியாமணி – முஸ்தபாவின் திருமணம் செல்லாது என்றும் கூறியுள்ளாராம்.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முஸ்தாபா, ‘ 2010 ஆம் ஆண்டிலேயே நானும் ஆயிஷாவும் பிரிந்து விட்டோம் என்றும் 2013ஆம் ஆண்டில் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் என்றும் தேவையில்லாமல் ஆயிஷா தற்போது பிரச்சனையை கிளப்புகிறார் என்றும் இந்த பிரச்சனையை தான் சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பிரியாமணியுடன் தனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இதுவரை பேசாமல் இருந்துவிட்டு தற்போது திடீரென பிரச்சினையை கிளப்புகிறார் என்று கூறியிருந்தார் .


இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஆயிஷா ’குழந்தைகள் நலனுக்காக எங்கள் இருவருடைய பிரச்சனைகள் விரைவில் தீர்வு விரைவில் தீரும் என்று தான் காத்திருந்ததாகவும், இனிமேலும் காத்திருக்க தான் தயாராக இல்லை என்றும் இனி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரியாமணியை திருமணம் செய்யும் போது தான் ஒரு பேச்சிலர் என்று நீதிமன்றத்தில் முஸ்தபா தெரிவித்திருந்தார் என்றும் ஆனால் உண்மையில் எனக்கும் அவருக்கும் விவாகரத்து நடைபெறவில்லை என்றும் ஆயிஷா கூறியுள்ளார்

Share via

More Stories