Advertiment

10 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்த ஜெயிலர்

by Staff

சினிமா
10 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்த ஜெயிலர்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் பத்து நாட்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 514.25 கோடி வசூல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. கோலிவுட்டில் வேகமாக 500 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை தற்போது ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது. முன்னதாக 'எந்திரன் 2.0' இந்த சாதனையை செய்து முதலிடத்தில் இருந்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.

Share via