ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடமைப்பணிக்கான தேர்வை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களைத்தேர்வு செய்து
இந்திய ஆட்சிப்பணியில் அமர்த்துகிறது..
இதற்கான முதல்நிலைத்தேர்வு மே மாத இறுதி அல்லது ஜீன் மாதம் முதல் வாரம்நடைபெறும்.இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர்முதன்மைத்தேர்வை எழுதுவர் .இதில் வெற்றிபெறுவோர் பிப்ரவரி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பெறுவர்
.இந்த நடைமுறை கொண்ட யு.பி,எஸ்.சி.தேர்வில் தமிழக மாணவர்கள்அதிகம் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்திய ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யு.பி.எஸ்.சி முதல்நிலைத்தைர்வு எழுதவுள்ள 1000 மாணவர்களைத்தேர்வு செய்து 10 மாதங்கள் மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளது.அதற்கான அறிவிப்பை 01.8.2023 அன்று
வெளியிட்டுள்ளது.இம்மாணவர்களுக்கு அண்ணாநிர்வாகப்பணியாளர்பயிற்சிக்கல்லூரியின் கீழ் இயங்கும் இந்தியக்குடிமைப்பணி பயிற்சி மையத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுவோர் உதவித்தொகையுடன் முழுநேர/பகுதி நேர பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.அனைத்து விபரங்களைப்பெற https//www.naanmudhalvan.tn.gov.in
இணையதளத்தை பார்வையிட்டு அனைத்து விபரங்களைப் பெறலாம்.