
ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்கில் வழியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெயிலர் இசைபாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி திரையரங்கிற்கு அனைவரும் வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்தாகதிரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணயன் கேட்டுள்ளாா்..
.இதற்கிடையே ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சி கிடையாது என்றும் காலை ஒன்பது மணியில் இருந்து தான் படம் தொடங்கும் என்றும் இரவு 1:30 வரை வழக்கமானது போல் படம் திரையிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வாரிசு, துணிவு போன்ற படங்களில் சிறப்பு காட்சியின் போது டிக்கெட்டின் விலை கூடுதலாக விற்றது சில உயிரிழப்பு அசம்பாவிதங்கள் நடந்ததை கொண்டு அதிகாலை காட்சிகள் வெளியிடப்படாது .மாமன்னன்- மாவீரன் போன்ற படங்களுக்கு சிறப்பு காட்சி வழங்கப்படாதது போல் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை காட்சிகளை திரையிட அரசு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் திரைப்பட சங்கத்தினரின் கருத்தாக உள்ளது..