Advertiment

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

by Editor

ஆன்மீகம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்பட்டதுஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தன.

மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், முதல் நாள் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று பூஜையின் நிறைவு நாளில் கலச பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக அடுத்த மாதம் 15ம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share via