Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட் டிக்கான பாஸ் தி பால்  கோப்பைக்கான வரவேற்பு -

by Admin

விளையாட்டு
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட் டிக்கான பாஸ் தி பால்  கோப்பைக்கான வரவேற்பு -

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாஸ் தி பால்  கோப்பைக்கான வரவேற்பு - ஹாக்கி விளையாடிய அமைச்சர் கீதா ஜீவன்,, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

 7-வது "ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி" ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது. 

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான். மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023" போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை ராடிசன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் -2023 போட்டியினை சென்னையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023 கோப்பை முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பாஸ் தி பால் - கோப்பை சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பயணிக்கிறது.

இந்தக் கோப்பை இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.  தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கோப்பையை வரவேற்றனர். தொடர்ந்து கோட்டையை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரனுடன் மற்றும் சிறுவர் ஒருவருடன் ஹாக்கி விளையாடி அசத்தினர்.தொடர்ந்து 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டியை முன்னிட்டு, செயற்கை புல்வெளி மைதானத்தின் பின்புற பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருணாச்சலம், கோட்டாட்சியர் ஜெயா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் ஹாக்கி ரசிகர்கள் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

Share via