Advertiment

தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே

by Editor

சினிமா
தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே

தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முளா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

இதில் தனுஷுடன் நடிக்க பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்தால் சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகிறதாம். ரித்திக் ரோஷனுடன் இணைந்து ‘மொகெஞ்சதாரோ’ படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் பூஜா. இதனால் அவர் சரியாக இருப்பார் என படக்குழு கருதியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share via