Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆபாச படம் எடுத்து விற்பனை: இந்தி நடிகை ஷில்பா  ஷெட்டியின் கணவர், 11 கூட்டாளிகள் கைது

by Editor

சினிமா
ஆபாச படம் எடுத்து விற்பனை: இந்தி நடிகை ஷில்பா  ஷெட்டியின் கணவர், 11 கூட்டாளிகள் கைது

 

ஆபாச படங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களை தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று நேரில் விசாரணைக்குச் சென்ற ராஜ் குந்த்ராவை விசாரணையின் முடிவில் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் இன்று அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ராஜ் குந்த்ரா அழைத்துச் செல்லப்பட்டார். மும்பை காவல் ஆணையர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆபாச படங்களை தயாரித்தது, அதை விற்பனை செய்தது, செயலி உருவாக்கியதில் ஏராளமான பங்கும் குந்த்ராவுக்கு இருந்துள்ளது, அதற்கான ஆதாரங்களும் கிடைத்தது.


இது குறித்து மும்பை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் “ 2021, பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீஸார், ஆபாச படங்கள் எடுத்தது, செயலி தயாரித்தது, விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், வெப் சீரிஸ் தொடர் எடுக்கப் போகிறேன் எனக் கூறி ஏராளமான பெண்களை நடிக்க அழைத்து, அவர்களை படிப்படியாக பாலியல் படங்களில் நடக்க ராஜ் குந்த்ரா கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.


இந்தப் புகாரையடுத்து, சமீபத்தில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள மாலத், மாத் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பாலியல் படங்கள் எடுக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, அங்கு அதிரடி சோதனைக்குச் சென்ற போலீசார் 5 பேரைக் கைது செய்தனர்.இந்த சோதனையில் இயக்குநர் ரோவா கான், புகைப்படக் கலைஞர் மோனு சர்மா, இயக்குநர் பிரதிபா நலாவாடே, இரு நடிகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், இதனை மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.


2009ம் ஆண்டில் ஷில்பா ஷெட்டியை ராஜ்குந்த்ரா மணந்தார். 2012ல் முதல் குழந்தை, கடந்த ஆண்டு 2வது குழந்தை பிறந்தது. முதல் குழந்தையின் பெயர்: வியான்ராஜ், 2வது குழந்தையின் பெயர்: சமீஷா விய, ஐபிஎல் கிரிக்கெட் டீம் ராஜஸ்தான் ராயல்சின் உரிமையாளர்களில் ஒருவர் ராஜ்குந்த்ரா.

Share via