Advertiment

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

by Editor

கல்வி
தமிழகத்தில் நாளை  பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12 ந்தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு 4 முறை கூடி நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்தக் குழுவின் 165 பக்கங்கள் கொண்ட முழு ஆய்வறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ராஜன் குழுவினர் சமீபத்தில் வழங்கியுள்ளனர்.

இருப்பினும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்காத நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி அரசு பள்ளிகளில் தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் மூலமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்ட் இறுதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கிறது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது.

நீட் தேர்வுக்கு கடந்த 16 ந்தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories