Advertiment

ஆகஸ்ட் 31-க்குள் கல்லூரிகளில்  இறுதித் தேர்வை நடத்தி  முடிக்க யு.ஜி.சி. உத்தரவு 

by Editor

கல்வி
ஆகஸ்ட் 31-க்குள் கல்லூரிகளில்  இறுதித் தேர்வை நடத்தி  முடிக்க யு.ஜி.சி. உத்தரவு 

 

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள், சேர்க்கை குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. யுஜி படிப்புகளில் சேருவதற்கான செயல்முறை 12 -ஆம் வகுப்பு முடிவு வெளியான பின்னரே தொடங்கும் என்று கூறியுள்ளது.


சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அனைத்து மாநிலகளில் 12 ஆம் வகுப்பு முடிவு ஜூலை 31-க்குள் தேதி அறிவிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) படிப்புகளில் சேருவதற்கான செயல்முறை செப்டம்பர் 30 க்குள் முடிக்கப்பட வேண்டும்.


யுஜி மற்றும் பிஜி படிப்புகளின் முதல் ஆண்டின் வகுப்புகள் அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கும். தற்போதுள்ள யுஜி 2 ஆம் ஆண்டு மற்றும் யுஜி 3 ஆம் ஆண்டு மற்றும் பிஜி 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, அவர்களின் வகுப்புகள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விரைவில் தொடங்கப்பட வேண்டும்.


அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆகஸ்ட் 31 க்குள் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று யுஜிசி கூறியுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.


கொரோனா நிலைமை மற்றும் மாநில / மத்திய அரசுகளின் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் 2021 அக்டோபர் 1 முதல் 2022 ஜூலை 31 வரை வகுப்புகள், தேர்வுகள், செமஸ்டர் விடுமுறையை போன்றவற்றை திட்டமிடலாம்.
தொற்றுநோய்களின் போது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் முழு கட்டணமும் திருப்பித் தரப்படுவதை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை ஆணையம் கேட்டுள்ளது.

Share via

More Stories