Advertiment

இளைஞருக்கு முதல்வர் பாராட்டு..!   

by Editor

விளையாட்டு
இளைஞருக்கு முதல்வர் பாராட்டு..!   

கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் விடாமுயற்சி செய்து உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைந்துள்ளார். இந்நிலையில், ராஜசேகருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டு அடிவாரத்திற்கு திரும்பிய தமிழக இளைஞருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.

Share via