
மேஷம்
மே 18, 2023
எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மே 18, 2023
வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விருப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : இழுபறிகள் மறையும்.
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
மே 18, 2023
சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : துரிதம் உண்டாகும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
கடகம்
மே 18, 2023
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் சம்பந்தமான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்கத்திலிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
சிம்மம்
மே 18, 2023
உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான புதிய தேடல் பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
மே 18, 2023
புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். நண்பர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.
அஸ்தம் : செலவுகள் ஏற்படும்.
சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
துலாம்
மே 18, 2023
தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். இழுபறியான சில விஷயங்களை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும்.
சுவாதி : ஒத்துழைப்பான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 18, 2023
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : புரிதல் மேம்படும்.
அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
தனுசு
மே 18, 2023
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : ஆசைகள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
மே 18, 2023
தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
மே 18, 2023
தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதுவிதமாக யுக்திகளை கையாளுவீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும். குறுந்தொழில் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மீனம்
மே 18, 2023
வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாக்குச் சாதுரியத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதாயம் மேம்படும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.