
மேஷம்
மே 17, 2023
வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சிந்தனைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
மே 17, 2023
உத்தியோக பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : நன்மையான நாள்.
---------------------------------------
மிதுனம்
மே 17, 2023
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
மே 17, 2023
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சமூக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும்.
பூசம் : துரிதம் உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
மே 17, 2023
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : முயற்சிகள் மேம்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
மே 17, 2023
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய தெளிவு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : மந்தமான நாள்.
சித்திரை : தெளிவு உண்டாகும்.
---------------------------------------
துலாம்
மே 17, 2023
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
சுவாதி : ரகசியங்களை அறிவீர்கள்.
விசாகம் : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 17, 2023
புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : புத்துணர்ச்சி ஏற்படும்.
---------------------------------------
தனுசு
மே 17, 2023
வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : பயணங்கள் கைகூடும்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மே 17, 2023
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : உதவி கிடைக்கும்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
மே 17, 2023
புதுவிதமான துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : தேடல் அதிகரிக்கும்.
சதயம் : நம்பிக்கை பிறக்கும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
மே 17, 2023
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடமான பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.