
மேஷம்
மே 07, 2023
வியாபார அபிவிருத்திக்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நிர்வாக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : சேமிப்பு குறையும்.
கிருத்திகை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
மே 07, 2023
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
மே 07, 2023
உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை மேம்படும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
மே 07, 2023
உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : இழுபறிகள் குறையும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
சிம்மம்
மே 07, 2023
எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். விரயங்கள் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : புரிதல் ஏற்படும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கன்னி
மே 07, 2023
வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மன வருத்தம் மறையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------
துலாம்
மே 07, 2023
பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் கைகூடும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 07, 2023
பணியில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடத்தில் நிதானம் வேண்டும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
விசாகம் : இடமாற்றம் உண்டாகும்.
அனுஷம் : சிக்கல்கள் குறையும்.
கேட்டை : பேச்சுக்களை தவிர்க்கவும்.
---------------------------------------
தனுசு
மே 07, 2023
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
---------------------------------------
மகரம்
மே 07, 2023
தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவோணம் : புத்துணர்ச்சியான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
மே 07, 2023
மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும். எதிலும் கர்வமின்றி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். சமையல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தேடல் உண்டாகும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
மே 07, 2023
சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கௌரவ பொறுப்புக்களின் மூலம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.