Advertiment

தி கேரளா ஸ்டோரி-படத்திற்கு அதிகரிக்கும் எதிர்ப்புக்கள். 

by Editor

சினிமா
தி கேரளா ஸ்டோரி-படத்திற்கு அதிகரிக்கும் எதிர்ப்புக்கள். 

தி கேரளா ஸ்டோரி கேரள பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக உள்ள கதைக் களத்தில் தயாராகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிட்டால் பிரச்னைகள் வரலாம் என உளவுத்துறையினர் எச்சரித்தனர். இதனையடுத்து, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான அணைத்து திரையரங்குகளிலும் தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.சென்னையில் வெளியிடப்பட்டுள்ள  தியேட்டர்களில் போலீஸ் கண்காணிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள AGS தியேட்டர் வாசலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர் வெளியே இருந்த பொன்னியின் செல்வன் 2 மற்றும் பர்ஹானா போன்ற படத்தின் பேனர்களை கிழித்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்ப்பிதெரிவித்து போராட்டங்களை நடத்திவருகிறது

Share via

More Stories