Advertiment

சரத்பாபு இன்னும் ஒரு சில நாட்களில் பூரணமாக குணமடைந்து திரும்புவார்.

by Admin

சினிமா
சரத்பாபு இன்னும் ஒரு சில நாட்களில்  பூரணமாக குணமடைந்து திரும்புவார்.

தமிழ் ,தெலுங்கு , என தென்னிந்திய மொழிகளில் அதிகமாக நடித்து, தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் நடிகர் சரத்பாபு.. அவர் ஏற்கனவே கல்லீரல் போன்ற பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  மேற்கொண்டு வருகின்றநிலையில்  , அவர்  இன்று  இறந்துவிட்டதாக  ஊடகங்களிலும்  சமூக வலைதளங்களிலும்  செய்தி பரவியது . இந்நிலையில், அவர் மருத்துவமனையில் தான் இருக்கிறார்..இன்னும்  ஒரு சில  நாட்களில்  அவர் பூரணமாக குணமடைந்து நலம் பெற்று திரும்புவார் என்று அவருடைய சகோதரி சொன்னதோடு சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகள் அத்தனையும் அப்பட்டமான பொய் என்றும் அவர் விரைவில் நலம் பெற்று  வருவார் என்று தெரிவித்திருந்தார்.. இன்று  இயக்குனரும் நடிகருமான மனோபாலா இறந்த அதிர்ச்சி  செய்தியிலிருந்து திரை உலகினா் மீளாநிலையில் சரத் பாபு  குறித்த செய்தி  வந்தவுடன் திரையுலகமே கொஞ்சம் ஆடித் தான் போய்விட்டது. 200 படத்திற்கு மேல் ந டித்து ரசிகர்களிடம் நீங்க இடம் பெற்றிருந்த  சரத்பாபுவினுடைய  இன்றைய செய்தி மிகுந்த  வருத்தத்தையும் வேதனையும் தந்ததாக ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

Share via

More Stories