
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக..
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. கே. சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..
சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், வணக்கத்திற்குரிய மேயர். இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் நடைபெறும் இடம், திருத் தேரோட்டம் நடைபெறும் இடங்கள், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம் ஆகியவற்றனை மாண்புமிகு. அமைச்சர் பெருமக்கள் ஆய்வு செய்தனர்.