Advertiment

ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா 

by Editor

ஆன்மீகம்
ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா 

நவக்கிரகங்களில் முக்கிய கிரகமும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு குருபெயச்சியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனிடையே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. அப்போது மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Share via