Advertiment

12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்

by Admin

கல்வி
12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 12 வது மற்றும் 11ஆவது பத்தாவது வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சியை கல்வித்துறை தீவிரப் படுத்தி உள்ளது .பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 3 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 5-ம் தேதியோடு  முடி வடைந்த நிலையில் ,தற்போது நடந்து கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், பன்னிரண்டாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான விடைத்தாள்களை  திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுற்றதும் அதனுடைய விடைத்தாள்  திருத்தும் பணி  மே  மூன்றாம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும்  அரசு முடிவு எடுத்து உள்ளது.  அதனால் 12-ம் மற்றும் பதினொன்றாம், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை  மே மாத இரண்டாவது வாரத்திற்குள்  வெளியிட  தமிழக பள்ளித் தோ்வு இயக்ககம் முடிவு செய்துள்ளது.

Share via

More Stories