
மேஷம்
ஏப்ரல் 15, 2023
பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 15, 2023
நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 15, 2023
உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 15, 2023
வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பமும், சோர்வும் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : விவேகம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 15, 2023
மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 15, 2023
விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்பு ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு மேம்படும்.
சித்திரை : ஈர்ப்பு ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 15, 2023
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
சுவாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 15, 2023
புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில பணிகள் நிறைவுபெறும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : லாபகரமான நாள்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 15, 2023
குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுபகாரியம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : வெற்றிகரமான நாள்.
உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 15, 2023
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மனதில் சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 15, 2023
உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில பணிகள் நிறைவுபெறும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 15, 2023
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : சோர்வு நீங்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.