
மேஷம்
ஏப்ரல் 09, 2023
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வெளியூர் வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அஸ்வினி : மந்தமான நாள்.
பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கிருத்திகை : நெருக்கடியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 09, 2023
உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரியம் நிமிர்த்தமான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 09, 2023
உடனிருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 09, 2023
கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான ஒப்பந்தம் சாதகமாக முடியும். உத்தியோகம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
பூசம் : சேமிப்பு மேம்படும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 09, 2023
மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் அமைதியான சூழல் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : அமைதியான நாள்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 09, 2023
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொத்துக்கள் நிமிர்த்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிக்கல்கள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 09, 2023
குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பேச்சுக்களின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
சித்திரை : பிரச்சனைகள் மறையும்.
சுவாதி : உதவிகள் சாதகமாகும்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 09, 2023
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : ஆர்வம் பிறக்கும்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 09, 2023
எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 09, 2023
வேகத்தை விட விவேகம் பெரியது என்பதை புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 09, 2023
ரசனை தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதிற்கு விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : சுறுசுறுப்பான நாள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 09, 2023
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் உண்டாகும். பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : தேடல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : அலைச்சல்கள் ஏற்படும்.