
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது .ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள்: நான்காம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்றும் ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து 21ம் தேதிக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தோ்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
: