
மேஷம்
மார்ச் 27, 2023
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். புதுவிதமான ஆபரணங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : வாய்ப்புகள் ஏற்படும்.
கிருத்திகை : ஈர்ப்பு உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 27, 2023
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 27, 2023
பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவு உண்டாகும். கருத்துவேறுபாடுகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : வாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : செலவு உண்டாகும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 27, 2023
சபை சார்ந்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
ஆயில்யம் : மனப்பக்குவம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 27, 2023
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
மகம் : ஆர்வம் ஏற்படும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 27, 2023
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக அமையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புனித தலங்கள் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 27, 2023
பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். உறவினர்களிடம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 27, 2023
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : திறமை வெளிப்படும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : காரியங்கள் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 27, 2023
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மகரம்
மார்ச் 27, 2023
வியாபாரம் சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 27, 2023
வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி : லாபம் மேம்படும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 27, 2023
வியாபாரத்தில் அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : மனோபலம் உண்டாகும்.
---------------------------------------