Advertiment

படத்திலும் எனக்குத் துணையில்லை .வாழ்க்கையிலுமில்லை- சிம்பு

by Admin

சினிமா
படத்திலும் எனக்குத் துணையில்லை .வாழ்க்கையிலுமில்லை- சிம்பு

பத்து தல படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது.பட நாயகன்சிம்பு,கெளதம் கார்த்தி,பிரியா பவானி சங்கர்,கெளதம் மேனன்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,தயாரிப்பாளர்ஞானவேல் ராஜா, இயக்குனர் கிருஷ்ணா மற்றும் சிறப்பு விருந்தினராக டி.ராசேந்தர், உஷா ராசேந்தர் வருகை புரிந்திருந்தனர். அமெரிக்காவில்  சிகிச்சை  முடிந்து முதன்முதலில் என் மகனுக்காக இந்த படவிழாவில் கலந்து கொள்வதாக கூறியதோடு..நீண்ட அடுக்குத்தொடரில் தம் மகனுக்கு தம் கற்றுக்கொடுத்தலை  விலாவாரியாக எடுத்துரைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.அடுத்து சிம்பு தம் கடந்த கால வாழ்க்கை நடந்த தவறுகள் இனிநடக்காத  வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும்  இனி  உங்களைத் திருப்திபடுத்தும் விதமாக  தன்னுடைய  செயல் இருக்கும்  என்று இனி பேசபோவதில்லை.செயல்தான் என்று உணர்ச்சிப்பெருக்குடனும் ஆதங்கத்துடனும் தம் நீண்ட பேச்சினுடே படத்திலும் எனக்குத்துணையில்லை.வாழ்க்கையிலுமில்லை என்று சுயஇரக்கத்துடன் பேசினார்.பத்து தல வருகிற மார்ச் 30 ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share via