Advertiment

நடிகைக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவர் கைது

by Editor

சினிமா
நடிகைக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவர் கைது

அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் வழங்கினார். அடையாறு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via