Advertiment

நயன்தாரா வீட்டிற்கு வந்த ஷாருக்கான்

by Admin

சினிமா
நயன்தாரா வீட்டிற்கு வந்த ஷாருக்கான்

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஷாருக்கானின் சமீபத்தில் வெளி வந்த பதான் திரைப்படம் பாலிவுட்டின் தேக்க  நிலையை உடைத்து புதிய ரத்தத்தை பீச்சியிருக்கிறது.நான்கு வருட இடைவெளிக்கு பின்பு வந்த பதான்  பான் இந்திய படமாக வெளி வந்து உலக அளவில் வசூலில் சாதனை  புரிந்துள்ளது .கிட்டதட்ட  பதினைந்து  நாட்களுக்குள் 946 கோடியை நெருங்கி  வசூலித்  துள்ளது  இப்படத்தை  அடுத்து அட்லி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் தான் சர்தார்.விரைவில் திரைக்கு வரும்விதமாக படதாக்குழு தீவரமாக வேலையில் இறங்கியுள்ளது.இந்நிலையில்,தன் சர்தார் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாராவின் இரட்டைக்குழந்தைகளைப்பார்த்து நலம் விசாரிக்க ஷாருக்கான் சென்னை வந்து நயனின் இல்லத்திற்கு வந்தார் .இச்செய்தி கோலிவுட் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.விக்னேஷ் சிவனை தன்னுடைய ஏ.கே.62 பட இயக்கத்திலிருந்து எடுத்துவிட்டார் என்கிற செய்தி பல நாட்களாக கோடம்பாக்கத்தில் சூறாவளியாகச் சுற்றிக் கொண்டிருக்கையில் ,பாலிவுட் நாயகனின் வருகை மீண்டும் புதிய கருத்துக்களை உலவ வழி சமைத்திருக்கிறது.

Share via