
திருதேனுபுரீசுவரர் திருவருள் வழங்கும் திருக்கோவில்தேவாரத்திருத்தலங்களுள் இருபத்து மூன்றாவது தலம்.ராமேஸ்வரத்தில், ராமர் ,ராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து -தரிசித்து திரும்பி வரும்பொழுது ,காயத்ரிதோசம்நீங்க ,வில்லின் முனையால் கோடித்தீர்த்தம் உருவாக்கி ,வழிபட்டதாக புராணக்கதை.இக்கோயிலை பட்டீச்சரம் என்றும்அம்பிகை இங்கு தவம் செய்ததால்,தேவி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.காமதேனுவின் மகள் பட்டி .இத்தலத்தில் மணலால் லிங்கம் அமைத்து பூஜித்து வழிபட்டதால் இக்கோவிலுக்கு பட்டீசுவரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.இக்கோவில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது கிழக்கு மேற்காக 650 அடிநீளமும் தெற்கே 295 அடிநீளமும் உடையது.ஐந்து பெரிய உயர்ந்த கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும் உள்ளமுதன்மை கோபுரம் ஏழு நிலைகளையும் மற்ற கோபுரங்கள் ஐந்து நிலைகளையும் கொண்டது முதல் பிரகார நடுமண்டபத்தில் பட்டீசுவரர் சன்னதி உள்ளது.வெளி பகுதியில் சோமாஸ் கந்தாஸ் ,சப்தகன்னியர் ,மகாலிங்க ம் ,ராமலிங்கர் ,லட்சுமி,சண்டிகேஷ்வர்,சூரியன் ,நடராசர், ரேணுகா தேவி, சுவர்ணவிநாயகர், நவக்கிரகங்கள் அமைந்துள்ளன .வடக்கே திருஞானம்பிகை சன்னதி உள்ளது அம்பாள் சன்னதி மண்டபம் சிற்பக்கலையின் வெளிப்பாடாக உள்ளது இக்கோவில் அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும்.சோழ மனினர்களின் குலதெய்வமாகவும் இவ்வம்மன் வழிபடப் பட்டதாகவும் வரலாறு. இங்சுள்ள துர்க்கை அம்மனை சோழர்கள் பிரதிஷ்டை செய்தாக கல்வெட்டு உள்ளது மேதாவி முனிவரின் சாபத்திற்கு ஆளான தர்மசர்மாஎன்பவர் சாபம் நீங்கிய தலமாகவும் இராகு தோஷம்நீங்கிடும் தலமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது இக்கோவிலில்காயத்ரி,ஞானவாவி,கோடிதீர்த்தம்,தபசுகேணி,தெப்பகுளம் ஆகிய ஐந்து நீராழி மண்டபங்கள் உள்ளன.