Advertiment

பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு:இந்து முன்னணி வரவேற்பு

by Editor

ஆன்மீகம்
 பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு:இந்து  முன்னணி வரவேற்பு

பழனி கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி பழனி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு, பகல் நேரங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள ஏராளமான இந்து கோவில்களுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். எனவே, பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்குவது போல், அனைத்து இந்து கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share via