தனுஷ் என்ற பெயர் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கோலோச்சி ஒலிக்கிறது. அடுத்ததாக அவர் புதிய படத்தை இயக்கி நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவும், அவரே இயக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதற்கு 'ராமன்' என்ற தலைப்பு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.