
ரசிகர்கள் மிகவும் ஆவலோடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்த வாரிசு, மற்றும் அஜித் நடித்த துணிவு, ஆகிய இரண்டு படங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில படங்களுக்கு ரசிகர்கள் காட்சிக்காக திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரெயிலர் காட்டப்பட்ட நிலையில் ரசிகர்களுடைய மனசு முழுக்க அவர்களின் ஹீரோக்களின் வசனங்கள் ரத்த நாளங்களில் அழுத்தத்தைக்கொடுத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 11ஆம் தேதியான நாளை இவர்கள் இருவரும் நடித்த படங்கள் வெளியாக உள்ளன.நள்ளிரவில் துணிவும்,அதே சமயம் சிலபகுதிகளில் வாரிசும் வெளியாக உள்ளது.ரசிகர்களிடம் அதிகபட்சகட்டணங்களையும் வசூலித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் ஒரே காம்ப்ளக்ஸில் இரண்டு திரையரங்குகளில் இவர்கள் படம் வெளியாக உள்ளது.அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் இரண்டு நடிகர்களின் படம் வெளியாவதில் மோதல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.