Advertiment

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  பாலிடெக்னிக் சேர்க்கை

by Editor

கல்வி
9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  பாலிடெக்னிக் சேர்க்கை

 

மாணவர்கள் 9ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 12ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்தார்.


இந்தநிலையில், 9ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது

Share via

More Stories