
ஸ்ரீவெங்கடேஷ்வரா பிக்சர்ஸ் சார்பாக தில் ராஜ் தயாரிப்பில் விஜய்,ராஷ்மிக மந்தனா,சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,ஷாம்,குஷ்பூ,சம்யுக்தா,யோகிபாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடத்திலுள்ள தெலுங்கு மொழியிலும் தமிழ் மொழியிலும் வெளிவரும் ஒரு குடும்ப பாங்கான கதை என்றும் விஜய் படத்தும் விதமாக,சண்டை,பாடல்,நடனம்,அம்மா சென்டிமென்ட் என பல்வேறு அம்சங்களின் கூட்டாக வாரிசுவை இயக்கி இருக்கிறார் வம்சி.ஏற்கனவே வெளியான தமனின் இசையில் உருவான மூன்று பாடல்களும் வெளியிடப்பட்டன.அதில் ரஞ்சிதமே..ரஞ்சிதமே பாடல் கோடிக்கணக்கானவர்களின் விருப்பமாக உருவானது .இந்நிலையில் இன்று 5.00(4.01.2023) மணிக்கு படத்தின் முன்னோட்ட காட்சியான ட்ரைலர் இன்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது