Advertiment

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் .பரமபத வாசல் திறப்பு.

by Editor

ஆன்மீகம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் .பரமபத வாசல் திறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுகந்தவல்லி சமேத ஸ்ரீ சுகர் நாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.பரமபத வாசல் வழியாக ஸ்ரீ சுகர் நாராயண பெருமாள் தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 க்கும் மேற்பட்ட பொருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது அப்பொழுது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு ஆதிகேசவபெருமாளை வழிபட்டனர்.

புதுச்சேரி காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 05.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 


மயிலாடுதுறையில் 22-வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி காலை 5.22 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வைகுண்ட எகாதசியை முன்னிட்டு ஸ்ரீரெங்கநாதப்பெருமாள் கோவிலில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பரமபதவாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28 வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயிலில்  ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு.


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தில் 1200 வருட பழமை வாய்ந்த 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்திலான வானமுட்டி பெருமாள் கோயிலில் காலை 6.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீகோதண்ட ராம சுவாமி திருக்கோயிலில் வைகுண்ஞ ஏகாதசியை முன்னிட்டு  இன்று அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


 

Share via