Advertiment

அனைத்திலும் நான் இருக்கிறேன்

by Admin

ஆன்மீகம்
அனைத்திலும் நான் இருக்கிறேன்

கிருஷ்ண பரமாத்மா-"அர்ஜீனா நான் தேவர்களில் இந்திரனாக இருக்கிறேன்.கிரகங்களில் நான் சூரியனாக இருக்கிறேன்.நான் எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறேன்.உயிரினங்களின் ஆரம்பமும் நானே.உயிரினங்களின் வாழ்க்கையும் நானே.உயிரினங்களின் .உயிரினங்களின் முடிவும் நானாகவே இருக்கிறேன்.வாயுதேவர்களில் தேஜஸ் ஆகவும் சந்திரனாகவும் இருக்கிறேன்.பொறிப்புலன்களில் நான் மனது ஆகவும்
  .மலைகளுக் கெல்லாம்  நான் இமயமாகவும் இருக்கின்றேன்.நான் ருத்திரங்களில் பரம சிவனாகவும் இருக்கின்றேன். யஷர்,அரக்கர் போன்றவர்களில் நான் குபேரனாகவும் இருக்கின்றேன்.எட்டு வசுக்களில் நான் அக்னியாகவும் இருக்கின்றேன்.நான் எல்லா உயிரினங்களின் உணர்வு ஆகவும் ஞான சக்தியாகவும் இருக்கின்றேன்.குருக்களில் நான் பிரகஸ்பதியாகவும் இருக்கின்றேன்.நான் மரங்களில் அரச மரம்.தேவரிஷிகளில் நாரதன்.சித்தர்களில் நான் கபில முனி.மனிதர்களுக்கு நான் அரசன்.நான் சர்ப்பங்களில் வாசுகி.நான் ஆயுதங்களிலவஜ்ராயுதம்.பசுக்களில் நான் காமதேனுவாகவும் இருக்கின்றேன் .நான் நல்லவர்களுக்கு நல்லவனாகவும் வீரர்களுக்கு வீரனாகவும்.வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களாகவும் இருக்கின்றேன்.நான் நாகங்களில் ஆதிகேசேஷன் ..மழைக்கு அதிபதியான வருணபகவானும் நானே.நீர்நிலைகளில் நான் கடலாகவும் இருக்கின்றேன்.ஆயுதம் எடுத்து வருபவர்களில்்ராமனாகவும்  விலங்குகளில் சிங்கமாகவும் சர்வதிகாரிகளில் நான் எமனாகவும் இருக்கின்றேன்.நான் பறவைகளில் கருடனாகவும் மீன் இனங்களில் முதலையாகவும் நதிகளில் கங்கையாகவும் இருக்கின்றேன்.நான் முனிவர்களில் வியாசராகவும் கவிஞர்களில் சுக்ர ஆச்சாரியாகவும் பாண்டவர்களில் அர்ஜீனன் ஆகவும் இருக்கின்றேன்.நான் மரம்,செடி,கொடிகளிலும் மனிதர்களிலும் பறவைகளிலும் மீன்களிலும் காற்றிலும் நெருப்பிலும் மழையிலும்முதலிய அனைத்திலும் பரவி இருக்கிறேன்.என்னுடைய சக்தியினால் அனைத்து உலகையும் தாங்கி இருக்கின்றேன் என்று பகவான் கிருஷ்ணர் அருளுகிறார்.
 

Share via