Advertiment

வடபழநி ஆண்டவர் கோவிலில் தரிசன அனுமதி

by Editor

ஆன்மீகம்
வடபழநி ஆண்டவர் கோவிலில் தரிசன அனுமதி

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்., மாதம் முதல், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி, தினசரி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் கோவில்களில், அரசு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, சென்னையின் பிரசித்தி பெற்ற வடபழநி ஆண்டவர் கோவிலில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகள், தெற்கு கோபுர நுழைவாயில் முழுவதும் துாய்மைப் படுத்தப்பட்டது. அதேபோல, கோவிலின் உட்பிரஹாரத்திலும் கிருமிநாசினி கலந்த தண்ணீரால் சுத்தப்பட்டுள்ளது. நுழைவாயிலில் பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், கிருமி நாசினி அளித்து கைகளை சுத்தப்படுத்திய பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.கோவில் ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து கோவிலுக்கு வரும் பக்தர்களை, வண்ண வண்ண கோலங்கள் போட்டு வரவேற்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

Share via